Powered By Blogger

Saturday, March 30, 2013

63Var Thiruvizha

நமசிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !
நமசிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க !
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க !
ஆகமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க !
ஏகன் அநேகன்! இறைவன் அடி வாழ்க !

63வர் திருவிழா !! மயிலையே விழாகோலம் பூண்டு இருப்பது கண்டு மக்களுக்கு உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.மாட வீதி எங்கும் மக்கள் அலை. எல்லோரும் கபாலியைக் காண சிரித்த முகத்துடன் வந்து கொண்டிருந்தனர். கோயிலுக்குள் நுழைந்தால், அடடா...என்ன ஒரு பக்தி எல்லோருக்கும்.தன் மனதுக்கு இனியவனான கபாலியை தரிசிக்க நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். அம்பாள் சந்நிதிக்குப் பக்கத்தில், 63 நாயன்மார்களும் இன்று நாம் வெளியே சென்று ஊரெல்லாம் பார்க்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக புத்தாடை உடுத்தி , ஏலக்காய் மாலை , ருத்ராக்ஷ மாலை, பூ மாலை அணிந்து இரு கரம் கூப்பி, கபாலியை தொழுது கொண்டு தயாராக நின்று கொண்டிருந்தனர்.பக்தர்கள் அனைவரும் கலந்த சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் , புளி சாதம் என தானம் செய்து கொண்டு இருந்தனர். அண்ணன் மகனுக்காகவும் என் மக்கள் ஆரோகிக்கியமாக , வியாதிகளற்று இருக்க பிஸ்கெட் , சாக்லேட் வாங்கிச் சென்றேன். 'நான்', 'என் குழந்தைகள்' என்று இது என்ன சுயநலம் என்றெண்ணி வெட்கிப் போனேன், விநியோகம் செய்யும் போது உலகத்தில் உள்ள அனைவருக்காகவும் வேண்டிக் கொண்டு , வெளியே வந்தேன்,
மாணிக்கவாசகர், சிவநேச செட்டியாருடன் அங்கம் பூம்பாவையின் என்பைப் உயிர்ப்பிக்க வேண்டி திருஞான சம்பந்தரை நோக்கி சென்று கொண்டிருந்தார் . சம்பந்தார்,
மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

பூம்பாவாய்! தேன்பொருந்திய அழகிய. புன்னை மரச்சோலைகள் சூழ்ந்ததும், இளமயில்கள் ஆரவாரிப்பதுமான ஊரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடு அமர்ந்தவன் மீது நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ?

என்று தேவாரம் பாட, உயிருடன் வருகிறாள் பூம்பாவை. சம்பந்தர், கபாலியின் விழாக் கோலங்கள் எல்லாம் காணாமல் போய் விட்டாயே,(ஒவ்வொரு மாத விழாவையும் குறிப்பிட்டு) என்று பாடுகிறார். உயிர்த்து எழுகிறாள் பூம்பாவை .முற்றிலும் உண்மை தான் அது, கபாலியின் விழாக்கள் காணாமல் போனால் இந்த வாழ்வே பயனற்றது தானே !!!!

No comments:

Post a Comment

About Me

My photo
I am a house wife.i have a passion for good music and cooking.